Monday, January 24, 2011

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

நா னும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் இந்தக் கேள்வி என்னை நோக்கியே. ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

தமிழன் போன்ற பிரிந்துகிடக்கும் சொரணையற்ற சமுதாயம் உலகில் எங்கும் இருக்க முடியாது. எந்தப் பிரச்சனைகளுக்கும் கோபம் கொள்ளத்தெரியாத சொரணையற்ற சமுதாயம். அன்றாட வாழ்விற்கு சில ரொட்டித்துண்டுகளும் , தனது சுயநலமும் நிறைவேறிவிட்டால் அவனவன் அவன் குடும்பம் தாண்டி தெருவரைகூட சிந்திக்கமாட்டான்.

சாதியாலும், மதத்தாலும் பொருளாதார வர்க்க பேதங்களாலும் ஒவ்வொருவனும் ஒரு தனி உலகம். அறிவு சீவி என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் சும்பன்கள் எல்லாம் ஒரு தனி இரகம். இவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எல்லாப்பிரச்சனையையும் எப்படி கதையாக , கவிதையாக மாற்றிக் கல்லாக் கட்டலாம் என்று மட்டும் நினைக்கும் சாம்பிராணிகள் கூட்டம்.  சமூகம் சார்ந்த கோபம் இல்லை யாருக்கும்.

நீங்கள் உலகப்பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். உங்கள் மாநிலத்தில் உங்களின் ஒருவனாக மீனவர்கள் தினந்தோறும் சாகிறார்கள். இது ஒரு கொந்தளிப்பாக வந்து இருக்க வேண்டாமா?

தொடரும் மீனவர்கள் படுகொலை
http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_25.html

கடற்புறத்தை எல்லையாகக் கொண்ட மாநிலத்தில் , மீனவ வாழ்க்கை இன்றியமையாதது. அதற்காக உங்களுக்கு எந்த சமூகக் கோபமும் இல்லையா?

எந்த அரசியல் கட்சிக்காவது அல்லது எந்த தமிழனுக்காவது இதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்? ஏன் உங்களால் ஓரணியில் சேரமுடியவில்லை?

மீனவர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, காவிரி, மலம் திண்ணும் பிரச்சனை , தேர் இழுக்கும் பிரச்சனை என்று எதுவுமே யாரையுமே பாதிப்பது இல்லை. இந்த வள்ளலில் இவர்கள்தான் ஈழம் குறித்து கவலைப்படுவார்களாம்.
  • தான் வாழும் தெரு அளவில்..
  • ஊர் அளவில்..
  • மாநிலம் அளவில் தமிழனாக இணைந்து ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுக்க முடியாதவன் இதையெல்லேம் ஒன்று சேர்த்து ஈழம் வாங்க உதவி செய்யப்போகிறானாம். 
இவர்கள் எல்லாம் தமிழர்கள்தான். தினமும் கடலுகுச் செல்லும் மீனவனும் , கச்சேரிக்கு செல்லும் மைலாப்பூர் மாமிகளும், சினிமாத் தியேட்டரில் கூடும் கூட்டமும், என் போன்றவர்களும் டமிலர்கள்தான்.
    1.ம‌லையகத் தமிழன்
    2. யாழ்பாணத் தமிழன்
    3.கொழும்புத் தமிழன்
    4.இலங்கைவாழ் இஸ்லாமியத் தமிழன்
    5.கனடாத் தமிழன்
    6.மலேசியாத் தமிழன்
    7.மொரிசியஸ் தமிழன்
    8.மயிலாப்பூர் தமிழன்
    9.சிங்கப்பூர் தமிழன்
    10.உலகத் தமிழன்
    11.தலித் தமிழன் ,அய்யர் தமிழன் அய்யங்கார் தமிழன்
    இன்னும் நிறைய டமிலர் வெரைட்டி இருக்கு.  எந்த பொதுவான எதிரியை வைத்து அல்லது பொதுவான காரணத்தை வைத்து இவர்களை ஒன்று சேர்ப்பது?. சும்மா நாம் டமிலர் என்று சொன்னால் எவன் தமிழன் என்று கேள்வி வரத்தான் செய்யும்.

    இந்தக் கொடுமையைப் பாருங்கள். இது எல்லாம் டமில்நாட்டில் மட்டுமே நடக்கும்.
    //இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.//
    http://maniyinpakkam.blogspot.com/2011/01/blog-post_13.html

    லீனா மணிமேகலை என்பவர் தற்போது எடுத்துள்ள ஒரு சினிமா செங்கடல். http://www.sengadal.com/  தற்போது அது சென்சார் போர்டால் மறுக்கப்பட்டுள்ளது. அந்த சினிமாவை மக்கள் பார்வைக்கு கொண்டுவர சினிமாக்காரர்களான பாரதிராஜா அல்லது சீமான் அல்லது விஜயகாந்த் அல்லது தங்களை இன உணர்வாளர்களாக் காட்டிக்கொள்ளும் சினிமா மக்கள் என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்கள்?

    லீனாவின் ஈழம் குறித்த பார்வையும் மற்றவர்களின் பார்வையும் ஒன்றாக இல்லாவிட்டாலும் அவர் சொல்லவரும் கருத்தைப் பரப்பவாவது ஈழம் என்ற ஒற்றைக் குறிக்கோளில் நின்று செயல்திட்டம் வகுக்கவேண்டுமே? இவர்கள் ஏன் சிந்திப்பது இல்லை.

    தனக்குச் சாதகமான வியாபாரம் (அரசியல்,சினிமா, புத்தகம் )இல்லாவிட்டால் இவர்கள் ஒரே கருத்தில் இணையமாட்டார்கள்.
     


    தமிழகம் மாநிலமாக...
    கரையோர எல்லைபுற மாநிலமான தமிழகத்திற்கு, அதை ஒட்டியுள்ள இலங்கை என்னும் நாட்டின் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியப் பங்கு உள்ளது. இலங்கை குறித்த இந்திய மத்திய அரசின் எந்த முடிவுகளும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக்கூடாது. சிறப்புச் சட்டம் தேவை. சேது திட்டம் தொடங்கி அன்றாட மீனவர் பிரச்சனைவரை சொம்புதூக்கிகளாகவே தமிழகம் உள்ளது.

    இதற்கு தமிழகத்தில் நல்ல அரசியல் தலைமை தேவை. ஏன் என்றால் கச்சத்தீவு போல அரசியல் ஒப்புதலுடனே தாரைவார்க்கும் அபாயமும் உள்ளது.

    தமிழ் ஒரு இனமாக...
    சாதி, மதம் தாண்டி தமிழன் ஒரு இனமாக் கூடி , மலையக மக்கள் தொடங்கி, மலேசியாத் தமிழர் தொட்டு , தமிழகத்தில் மலம் திண்ண வைக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன செய்யலாம் என்று ஒரு தீர்க்கமான அஜென்டா இருக்க வேண்டும்.


    வாய்ச் சொல் வீரர்கள்
    http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

    இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை
    http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_23.html
    .

    தமிழன் என்ற ஒரு இனம் இல்லை. பல உட்பிரிவுகள் (பொருளாதாரம், சாதி, மத , வர்க்க உட்பிரிவுகள்) அவர்களுக்கான நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன.

     .
    வெட்கப்படுகிறேன் வருத்தப் படுகிறேன் என்று சொல்வதற்குக்கூட வெட்கப்படும் ஒருவன் நான்.