Thursday, January 27, 2011

ஊரை ஏமாற்றும் சீமான், வைகோ, திருமா

நி ரூபிக்கப்பட்ட மற்ற தமிழனத்துரோகிகளை இங்கே நான் குறிப்பிடவிரும்பவில்லை. சீமான், வைகோ  மற்றும் திருமா ஆகியோரை இன்னும் சிலர் நம்புவதால் அவர்களை மட்டும் குறித்தானது.

திருமா:
இவரின் ஆரம்பகால அரசியல் என்பது சமூகப் பார்யைவோடுதான் , சமூக இனப் போராளியாக ஆரம்பித்தது.கடைசியில் கார்ப்பொரேட் அரசியல்வாதியாகிவிட்டார். இன்றுவரை இவர் தி.மு.க  , காங்கிரசுடன் மற்றும் இராஜபக்சேயுடனும் மாறி மாறி சிரித்து போஸ் கொடுக்கிறார்.  எப்படி ஒரே சமயத்தில் தமிழனுக்காக அழவும், மறுபுறம் தி.மு.க ,காங்கிரசுடன் மற்றும் இராஜபக்சேயுடனும் சேர்ந்து காவடி தூக்கவும் முடிகிறது?

வைகோ:
காமெடிக் கதம்பமாய் ஆகிப்போனவர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க வைவிடவா காங்கிரஸ் தமிழினத் துரோகம் செய்துவருகிறது?  இவருக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஒரு செல்வாக்கும் இல்லை. தி.மு.க வில் ஒன்றும் செய்ய முடியாது.

சீமான்:
அரசியலில் புதுக்குழந்தை. இவர் வேறு நாம் தமிழர் என்ற காமெடிக் கட்சியைத்துவக்கியுள்ளார். யார் யார் தமிழர் என்று சொல்லுங்கள் முதலில். இவர் காங்கிரசை எதிரி என்கிறார். அப்படி என்றால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தமிழனுக்கு எதிரி இல்லையா?

சின்ன கதை:
தமிழகம் என்ற ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு, மக்கள் என்பவர்கள் உரிமையாளர்கள். அந்த வீட்டைக் காவல் காக்க‌ கட்சி என்ற கூர்க் (Coorg) ஒருவரை காவலுக்கு வைக்கிறார்கள். மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்க வருகிறது.

கட்சி என்ற கூர்க் மனிதர் என்ன செய்யலாம்?
1. கட்சி என்ற கூர்க் மனிதர், மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை எதிர்த்துப் போராடி, மாண்டுவிடுவார். மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.

2. கட்சி என்ற கூர்க் மனிதர் மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை எதிர்த்துப் போராடி, பல காயங்களுடன் குற்றுயிராய்கிடக்க, மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , அவரைத் தாண்டி தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.

3. கட்சி என்ற கூர்க் மனிதர் எதிர்த்துப் போராட முடியாமல் ஓடிவிடுவார். ஆளில்லாத வீட்டில் , மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.
இவைதான் ஒரு மனிதனாக கட்சி என்ற கூர்க் மனிதர் செய்ய முடிந்தது.
ஒன்று வீரனாக இருந்து மாண்டுபோகலாம் அல்லது கோழையாக இருந்து ஓடிவிடலாம்.

இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்
4. கட்சி என்ற கூர்க் மனிதர் , மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை போடும் பிச்சைக்காசுக்காக தான் காவல் செய்ய வேண்டிய வீட்டையே காட்டிக்கொடுக்கலாம். காசுவாங்கிவிட்டதால் அல்லது தனக்கு சில ஆதாயம் கிடைப்பதால் மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை செய்யும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
இந்த 4 ஆவது அயோக்கியத்தனம், துரோகம், கேவலமானது. 
ரை ஏமாற்றும் சீமான், வைகோ, திருமா ஆகியோர் அயோக்கியத்தனம் செய்யும் காவலாளியுடன் கூட்டு வைத்துக் கொண்டே அதே சமயம், மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை மட்டும் குற்றம் சாட்டுவது,  மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? உண்மையில் எதிரி யாரென்று தெரியவில்லையா அல்லது தவறான இலக்கை அடையாளம் கட்டுவதன்மூலம் கூட்டுக் கொள்ளை அடிக்கப் பார்க்கிறீர்களா?

உள்ளூர் கூர்க் காவலாளி , மத்திய வலிமையுடன் கூட்டணியில் உள்ளார். இன்னொருவர் எப்படா திண்ணை காலியாகும் என்று அதே மத்திய வலிமையுடன் கூட்டுச்சேர காத்துள்ளார்.  நீங்கள் எல்லாம் எப்படி சலிக்காமல் உள்ளூர் கூர்க் காவலாளியோடு கூட்டு வைத்துக்கொண்டு , வெட்கமே இல்லாமல் மத்திய வலிமைதான் கெட்டவர் அவரை எதிர்க்கிறோம் என்று ஏமாற்றுகிறீர்கள்? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற நிலையில் எப்படி வெட்கம் சிறிதும் இல்லாமல் அரசியல் செய்கிறீர்கள்/ அல்லது இதுதான் நீங்கள் அறிந்த அரசியலா?

"தனியா நின்றால் மக்கள் ஓட்டுப்போடவில்லை"  என்று சொல்லும் நீங்கள், ஓட்டுப்போடும் அளவிற்கு என்ன செய்துள்ளீர்கள்? மக்கள் செல்வாக்கு உள்ளவன்தான் அவர்களின் வாக்கைக் கேட்டு தேர்தலில் நிற்கவேண்டும். தேர்தலில் நிற்பதாலேயே வாக்குப் போடவேண்டும் என்று கேட்க எந்த உரிமையும் இல்லை. அதற்கான தகுதியை முதலில் வளர்க்க வேண்டும்.

உள்ளூரில் யாரும் வெளிநாட்டுப் பிரச்சனைக்காக ஓட்டுப்போடுவது இல்லை. தமிழகத்தில் வெற்றிபெற, தமிழகத்திற்கான அஜெண்டா இருக்க வேண்டும். அதற்கான உழைப்பு இருக்க வேண்டும்.கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.க.இ.க வினர் செய்த மக்கள் போராட்டங்கள் அளவிற்குகூட வைகோ எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை. உத்தப்புரம் சுவர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். பெர்லின் சுவர்போல இந்தக்கொடுமை இன்று உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டாமா? திருமா எந்தனைமுறை இதை பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்? உடைத்தெரியவேண்டாமா அந்தச்சுவரை? மக்களின் அன்றாட வாழ்வில் கலக்காமல் எப்படி அவர்களிடம் ஓட்டுக் கேட்கமுடியும்?  இராமாஸ்வர மீனவர்களின் பிரச்சனையையே தமிழர் பிரச்சனையாக சென்னையில் இருக்கும் கிண்டு என்ற பத்திரிக்கைகூட நினைக்கவில்லை.  இந்த வள்ளலில் எத்தனைகாலம் ஈழ அஜெண்டாவை வைத்துக் கொண்டு தமிழகத்தில் ஓட்டு கேட்கமுடியும்?

நீங்கள் இன்னும் 10 வருடங்களுக்கு தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடப்போவது இல்லை. ஆனால், அந்த 10 வருடங்களை உண்மையான மக்கள் பணியில் செலவழித்தால் நிச்சயம் மக்களே உங்களை சிம்மாசனத்தில் வைப்பார்கள். நீஙகள் அப்படிசெய்தும் மக்கள் ஓட்டுப்போடவில்லையா? அவர்களை பேய்கள் திங்கட்டும். அப்படி மக்கள் உங்களை சிம்மாசனத்தில் வைக்கும்போது , உலக நலன்களைப் பேசமுடியும். அதைவிட்டுவிட்டு ஏன் இப்படி தேர்தல் கூட்டணிக்காக அலைகிறீர்கள்?  இதில் என்ன சாதித்துவிட முடியும் என்று சொல்லுங்கள்?

அரசியல் என்பது தேர்தலில் நின்று ஓட்டுக் கேட்பது இல்லை. மக்கள் பணி செய்வதால் மக்கள் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வது. உண்மையான மக்கள் பணி செய்வனுக்கு , தேர்தல் மூலம் வரும் அதிகாரம் ஒரு கூடுதல் கருவி தவிர அது மட்டுமே கருவி அல்ல.
.

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா?- சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
http://www.nerudal.com/nerudal.24944.html


.