http://all-free-download.com
கம்யூனிஸ்ட்:
எந்தக் கட்சிக்காவது காவடி எடுத்து சில சீட்களைப் பெறுவது மட்டுமே கொள்கையாக்கொண்டு வாழும் இந்தக் கேவலமான வாழ்க்கை தேவையா? கிடைக்கும் சில சீட்களுக்காக கொள்கை, மானம், என்று எல்லாத்தையும் அடகுவைத்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்? இதுதான் மார்க்சும் எங்கெல்சும் கற்றுக்கொடுத்த அரசியலா?
வெட்கெங்கெட்டவர்களே உங்கள் கட்சிகளின் பெயர்களில் இருந்து கம்யூனிசம் என்ற பெயரை எடுத்துவிடுங்கள்.
வைகோ:
இதெல்லாம் ஒரு பிழைப்பு? அரசியல் என்பது கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல் கொண்ட மக்கள் நலன் சார்ந்த அமைப்பு. மக்கள் நலன் சார்ந்த அரசியலில் தேர்தல் மற்றும் ஆட்சி என்பதும் ஒரு ஆயுதம். அது மட்டுமே ஆயுதம் அல்ல. கிடைக்கும் பத்து இருபது சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?
மாறி மாறி கூட்டுவைத்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்?
தோற்றாலும், மடிந்தாலும் வீரன் என்பவன் தான் நம்பிய கொள்கைக்காக போராடுபவனே தவிர, ஜெயிக்கும் குதிரையில் பணம்கட்டும் சீட்டாட்டக்காரன் அல்ல.
வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!
http://www.vinavu.com/2011/03/16/vaiko-mdmk/
அதிமுக/திமுக:
யார் மத்தியில் ஆண்டாலும் அவர்களை மிரட்டி உங்களுக்குத் தேவையானதைப் பெறப்போகிறீர்கள். மக்கள் நலம் என்பது என்ன என்று உங்களிடம் பேசுவது வீண்.
காங்கிரஸ்:
?
மக்கள்ஸ்:
எது நடந்தாலும் தனக்கு நேரடிப் பாதிப்பு இல்லாதவரை ...இலஞ்சம், தேர்தலில் ஓட்டுக்கு காசு , போக்குவரத்து விதிகளை மதியாமை போன்ற குணக்குன்றுகளான உங்களுக்கு அந்த ரேஞ்சில்தான் தலைமைகிடைக்கும்.
மாற்றம் உங்களில் இருந்துவராதவரை அரசியல் கட்சிகளைக்குறை சொல்ல உரிமை இல்லை.
குறைந்த பட்சம் வார்டு, பஞ்சாயத்து அளவிலாவது ஒற்றுமையைக் காட்டுங்கள்.காசுக்கும் பிரியாணிக்கும் ஓட்டைவிற்கும் xxxகள் அரசில் கெட்டுவிட்டது என்று டீக்கடையில் உட்கார்ந்து பீலாவிடக்கூடாது.
.
கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalv
அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalve
ஏண்
http://kalve
.