Tuesday, October 25, 2005

பதிவு14: தினமலரில் சானிடரி நாப்கின் விசயம்!

அன்பு வலைப்பதிவர்களே,
இங்கு நாம் விவாதித்த நாப்கின் விசயம் தமிழக அரசு அதிகாரிகள்,காவல்துறையின் உளவுப் பிரிவு ஆகியோர் பார்வைக்கு செல்லும் வகையில் " முதல்வருக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் தினமலர் செய்திமலர் (அக்டோபர் 2005) என்ற இலவச இணைப்பில் வந்துள்ளது.இது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் வரும் இணைப்பாக இருந்தாலும் வி.ஐ.பி.க்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. தினமலர் போன்ற ஒரு வெகுசன ஊடகம் மூலம் இந்த செய்தி மக்களுக்கு சென்றடைவதே ஒரு சிறந்த விழிப்புணர்வு முயற்சியாகும்.

தினமலரின் இந்த முயற்சிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தல் நேரமாக வேறு இருப்பதால், எந்த மூலையில் இருந்தாவது ஆதரவுக் குரல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முன்பே சொன்னபடி இந்த விசயம் விவாதிக்கப்படுவதே ஒரு நல்ல முன்னேற்றம்.

வலைப்பதிவில் முதன் முதலில் இதுபற்றி எழுதிய ரம்யா,நாம் விவாதித்த இந்த விசயத்தை தினமலர்வரை எடுத்துச்சென்ற நமது சக வலைப்பதிவாளர் மற்றும் ஆதராவாய் இருந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

நல்ல விவாதக்களமாக,தமிழ் வலைப்பதிவின் திரட்டியாக இருந்துவரும் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி.
சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்
சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்

செய்தியை தெளிவாகப் பார்க்க படத்தின்மேல் சொடுக்கவும்.

தினமலரின் முன்னுரை...

வலைப்பதிவுகளில் காணப்படும் பல செய்திகள் நம்மை வியக்க வைக்கக் கூடியவையாக உள்ளன.

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கடிதமாக 'கல்வெட்டு' என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் செய்தி,இதுவரை யார் கவனத்திலும் படாத,ஆனால் மிக அடிப்படையான பிரச்னையைப் பேசுவதாக இருக்கிறது. முதல்வரின் கவனத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குக்கிராமத்து, இளம் பெண்களுக்கும் போய்ச் சேர வேண்டிய செய்தியாகவும் இது இருப்பதால் இதை இங்கே வெளியிட்டிருக்கிறோம். படித்து முடித்த பிறகு 'இதுவா...?' என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் காலம் காலமாக வெளியில் சொல்ல முடியாத பல்வேறு ரணங்களையும்,வலிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி அடித்தட்டு பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் நிச்சயமாகப் புரியும்.






**************************
தமிழ்ப்பதிவுகள் , தமிழ்
***************************

18 comments:

  1. கல்வெட்டு, நான் கோடு போட்டேன். நீங்க ரோடு போட்டுட்டீங்க!! :-)

    நீங்க எடுத்த முயற்சி கவனம் பெற்றதை குறித்து மிகவும் மகிழ்ச்சி. இதனால் கிராம பெண்களின் இந்த பிரச்சனைக்கு ஏதாவது ஒரு சிறு தீர்வாவது கிடைத்தால் நாம் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. நல்ல செய்தி, கல்வெட்டு. தக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

    ReplyDelete
  3. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. //ஆனால் காலம் காலமாக வெளியில் சொல்ல முடியாத பல்வேறு ரணங்களையும்,வலிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி அடித்தட்டு பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் நிச்சயமாகப் புரியும்.//

    Well said Dinamalar

    ReplyDelete
  5. ரம்யா,
    அது உண்மைதான். தினமலர்வரை இந்தச்செய்தி போனதற்கு முதல் காரணம் உங்களது பதிவுதான்.

    ரம்யா,வாஸ் ஆப் தவிங், கலை நன்றிகள்

    ReplyDelete
  6. பாராட்டப்படவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தினமலருக்கு பாராட்டுகள். கல்வெட்டுக்கு வாழ்த்துகள். அமைச்சரின் கவனம் கிடைத்தால் சந்தோஷங்கள் :-)

    ReplyDelete
  8. யாருமே யோசிக்காத, யோசிக்க தயங்கிய, அல்லது அருவருப்பானது என்று நினைத்த
    ஒரு விஷயத்தை பதிவு செய்து அட இது நமக்கு தோன்றவில்லையே என்று வியக்க வைத்து
    விட்டீர்கள். மேலும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி விட்டீர்கள். தொடரட்டும் உமது பணி.

    ReplyDelete
  9. தமிழ்வாணன்,பாலா மற்றும் ஜோக்கர் நன்றி.

    ஜோக்கர்,
    முதல் நன்றி ரம்யாவிற்குத்தான். அவர்தான் வலைப்பதிவில் முதலில் இதைப் பேசியவர்.

    பாலா,
    ஏதேனும் அமைச்சரின் கவனம் கிடைத்தால் நல்லதுதான்.

    ReplyDelete
  10. நல்ல முயற்சி. ஆனால் இலவசமாகக் கிடைக்கும் எதையும் பயனுடன் உபயோகிக்கும் தன்மை நம் கிராம மக்களிடம் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய காலங்களில், பிரசவமான பெண்களுக்கு gauze துணியில் செய்யப்பட்ட நாப்கின்களை வழங்குவது உண்டு, அந்த சமயத்திலாவது சுத்தம் அத்தியாவசியம் என்பதை உணர்த்த. ஆனால், ரத்தப் போக்கைத் தாங்கும் தன்மை அதற்குக் குறைவு என்ற நொண்டிச் சாக்குடன் பழைய துணியையே பயன்படுத்துவதை பல முறை பார்த்திருக்கிறேன். பள்ளியிலேயே புரிய வைத்து, மிகச் சொற்பமான விலையில் கிடைக்கும்படி செய்வதே நன்றாக இருக்கும்.
    உங்கள் முயற்சியை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை.

    ReplyDelete
  11. தாணு,
    கருத்திட்டமைக்கு நன்றி.
    //ஆனால் இலவசமாகக் கிடைக்கும் எதையும் பயனுடன் உபயோகிக்கும் தன்மை நம் கிராம மக்களிடம் இல்லை.//
    இது கசப்பான உண்மைதான். ஆனால் இந்த முக்கியமான விசயத்தில் சுகாதார விழிப்புணர்வு வேண்டும். அது கிடைக்கும் பட்சத்தில் மக்கள் நன்றாகப் பயன்படுத்துவார்கள் என்றே நினைகிறேன்.

    //ரத்தப் போக்கைத் தாங்கும் தன்மை அதற்குக் குறைவு என்ற நொண்டிச் சாக்குடன் பழைய துணியையே பயன்படுத்துவதை பல முறை பார்த்திருக்கிறேன்.//

    இந்தப் பழமையான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். மகளிர் அமைப்புகள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியவையுடன் அரசின் சுகாதார அமைப்பும் செயல்பட்டால் மாற்றம் தோன்றும்.எனது வருத்தமே ஆணுறை, AIDS பற்றி பேசிய அளவிற்கு இது பேசப்படவில்லை. பேசினால் ஒருவேளை நல்லது நடக்கும்.

    ReplyDelete
  12. கோடு போட்ட ரம்யாவிற்கும், ரோடு போட்ட உங்களுக்கும், தினமலருக்கும் என் பாராட்டுக்கள்

    ReplyDelete
  13. மனம் கனிந்த பாராட்டுக்கள்.

    ரம்யா, உங்களுக்கும்தான்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் கல்வெட்டு..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. முன்பு சுனாமி நிவாரணத்தில் சிறு பங்கு, ஏழை மாணவிக்கு பொருள் உதவி, இப்பொழுது சமூக விழிப்புணர்வுக்கு ஒரு முயற்சி. தமிழ் இணைய பதிவாளர்களின் சாதனைகள் தொடர வேண்டும். ரம்யா, கல்வெட்டுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பாராட்டுக்கள் கல்வெட்டு... நீங்கள் சொல்லவந்த விடயம் சொல்ல வேண்டிய இடத்துக்கு சென்று சேர்ந்தமைக்கு. நிச்சயம் நல்ல சேதி விரைவில் வரும் (என்று பட்சி சொல்லுகிறது).

    இதை இங்கு கொண்டுவந்த ரம்யாவுக்கும்,
    தொடர்ந்து வலைப்பதிவுகளை - சக வலைப்பதிவாளர்களைவிட அதிகமாக ஊக்குவிக்கும் தினமலருக்கும் சிறப்பு நன்றி.

    ReplyDelete
  17. பதிவை பார்க்கும் போது,
    ரொம்ப பெருமையா இருக்கு.
    இதில் சம்பந்தபட்ட எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எனது உளமார்ந்த
    நன்றியுடன், வாழ்த்துகள்!

    தொடருங்கள்.... வெற்றி நிச்சயம்,

    ReplyDelete
  18. கிறுக்கன் (என்னங்க இப்படிப் பேரு வச்சுருக்கீங்க) , ஜேகே,ராம்கி,இனொமெனொ,இராமசந்திரன் உஷா,அன்பு, ஜோசப் இருதயராஜ்,துளசி அனைவரின் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete