Friday, March 20, 2020

மருத்துவர் சாலினி செய்த சம்பவங்கள்: புமாமோ என்ற "அல்ப கேசு"

டந்த 15 வருடங்களாக இணையத்தில் உள்ளேன். எதிர்தரப்பை சரியாகவே அடையாளம் கண்டுள்ளேன் ஆரம்பகாலத்திலேயே என்பதில் எனக்கு மகிழ்ச்சியுண்டு. 

பத்ரி என்ற ஒரு ஆளை அனைவரும்கொண்டாடி, அவர் கடையின் மொட்டைமாடியில் ஆங்கில சினிமாப்படங்களை கூட்டமாக‌ (public screening) *உரிய அனுமதி* இல்லாமல் பார்த்து, அந்த திருட்டுத்தனத்தையும் சிலாகித்து அந்த அமெரிக்க ரிட்டர்ன் ஆளை கொண்டாடிக்கொண்டிருந்த காலத்தில், " ஏன்யா உன் பதிப்பக புத்தகத்தை செராக்ச் எடுத்து மற்றவன் இப்படி புத்தகக்கண்காட்சியில் பிறருக்கு கொடுத்தால், சும்மா இருப்பியா?" என்றேன். அத்தோடு அதை மூடிவிட்டார் பத்ரி. அதுபோல அவரின் கதைபுக் லாகாவில் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த பாரா என்ற ஒருவர் , இணையத்தில் படங்களை திருடி அதை புத்தகங்களின் அட்டைப்படமாக போட்டு விற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பஞ்சாயத்தும் சந்தி சிரித்தது.

இலக்கிய அடியாள்: செயமோகன்
http://kalvetu.blogspot.com/2017/03/blog-post_27.html
//ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் (professional and commanding)  ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படைப்பு/ஆளுமை என்பதை ஒரு துறைக்கும் மட்டுமான புனித பரிவட்டமாக மாற்றிவிட்டார்கள் இந்த தமிழ் எழுத்துவேலை செய்பவர்களும் , அவர்களின் இரசிகர்களும்.
இணையத்தில் இவர்கள் அரசியல் அடியாட்கள்போல , அவர்களுக்கான ஒரு அடியாட்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள். இவர்களை எதிர்த்து ஏதேனும் சொல்லிவிட்டால் "நீ முட்டாள். கதை படி " என்ற மந்திரத்தை எடுத்து வீசுவார்கள்.//
எழுத்துரு: ஒரு இணைய மொண்ணையின் கடிதம்
http://kalvetu.blogspot.com/2013/11/blog-post.html
பெரிய ஒலிபெருக்கியின் சப்தம்
http://kalvetu.blogspot.com/2016/08/blog-post.html

தை புத்தகத்திற்கு என்று சில அடிமைகள் உள்ளார்கள். அவர்கள் இந்த பார்ப்பனன்களின் பின்னால் போய் தங்களின் கதைகளை வெளியிட்டதாலேயே அவரை அனுசரித்து கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள். இதில் இணைய மொண்ணை புமாமோ (புளிச்ச மாவு மோகன்) கத பொக் அடிமைகள் ஒருவிதம். இதுதான் சங்கிகளின் சாக்கடை. இங்கிருந்தே பல சங்கிகள் உற்பத்தியாகிறார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். நம்முடன் பேசிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று "ஆசானின் வெண்முரசுல பாருங்க.." என்று ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு புமாமோ ஆசான் எனும்போதே நீங்கள் அவர்களுடன் கவனமாக இருக்கவேண்டும். எனது வட்டத்தில் நான் இவர்களை சேர்த்துக்கொள்வதே இல்லை. அப்படியே இருந்தாலும், இவர்களை பொதுவில் விமர்சிக்க தயங்குவது இல்லை. இவர்களின் கதை புத்தக அறிவு என்பது எதற்கும் பயன்படாத ஒரு குப்பை. சுசாதா அடிமைகளும் இவ்வகையே.

ப்படியான இந்த புமாமோ, நமது அரக்கன் பெரியாரைப் பற்றி, அவரின் வைக்கம் போராட்டத்தைப்பற்றி , "பெரியார் பத்தோடு பதினொன்றாக இருந்தார்" என்று பேசியது உண்டு. புமாமோ ஒரு குப்பை. சமூக அரசியல் அறிவற்ற ஒரு அம்புலிமாமா கதைபுக் டைப்ரைட்டர். திராவிட அரசியல் மீது வன்மம் கொண்டவர். இந்த நூற்றாண்டில் ஒரு சனாதன அம்புலிமாமா கதையை டப்பிங் செய்து கொண்டிருக்கிறார் வெண்முரசு என்ற பெயரில். அதன் தேவை என்ன? அவரின் நோக்கம் , கிந்துத்துவாவை கதைகள் மூலம் கடத்துவது. அது போல , அன்னா கசாரேவுக்கு புக் போட்டு அவரையும் பீசேபியைம் கொண்டாடுவது. இதுதான் இந்த புமாமோ சங்கியின் நோக்கம்.

லக மனிதாபிமானக் கழகத்தின் சார்பில், பழ.அதியமான் எழுதிய  "வைக்கம் போராட்டம்" நூலறிமுக நிகழ்ச்சி(14-03-2020) பேசிய  மனநல மருத்துவர் சாலினி இந்த புமாமோவை மெட்ராசு பாசையில் ஒரு வாங்க்கு வாங்கி இருப்பார். நான் மருத்துவர் சாலினி மீது மரியாதை கொண்டவன். அவரும் என்னை போலவே புமாமோவை துவைக்கிறார் என்பது மகிழ்ச்சி.

அவர் பேசியதை முழுவதுமாக கேட்டுவிடுங்கள்.

பெண்களுக்கெதிரான இந்து மதம் | மருத்துவர் ஷாலினி | Dr Shalini | வைக்கம் போராட்டம்


அவர் உரையில் இருந்து சில முக்கிய சம்பவங்கள்.

புமாமோ சம்பவங்கள்:
  • புளிச்ச மாவு மோகன் என்றே அழைக்கிறார்.
  • புமாமோ ஒரு "அல்ப கேசு" என்கிறார்.
  • இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேணுமா? என்கிறார்.
  • புமாமோவை ஒரு குப்பையாகவே ஒதுக்குகிறார்.


இந்த உரையில் இருக்கும் வேறு சில தகவல்கள்.

ராமனுக்கு ஒரு அக்கா உண்டு. பெயர் 'சாந்தா". பெண்களை மனிதனாக மதிக்காத பார்ப்பனன்களின் கதையில், மகள் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லாமல் தவம் செய்து பிறந்தவன் ராமு என்பார்கள். ஆம் ராமுவின் அக்கா "சாந்தா"வை புத்திரியாக மதிக்கவேயில்லை.

வால்மீகி ராமாயனத்தின் உண்மையான பெயர் "சீத்தாயா சரித்திர மகத்". அதாவது சீதையின் மாகா சரித்திரம்" என்பதே. இந்த சீதையின் சரித்திரத்தை, அவரின் குழந்தைகள் (லவ,குச) தெருத்தெருவாக பாடி, தங்கள் அம்மாவுக்கு அப்பன் ராமன் செய்த கொடுமைகளைச் சொல்லி ஊர் ஊராக பொலம்பிய கதையே இது. இதை முன்ன பின்ன ஒட்டி பட்டி டிங்கரிங் பார்த்து ராமுயாணம் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் இது , ராமனால் துன்பப்பட்ட சீதையின் கதையை, அவரின் குழந்தைகள் பொதுமக்களிடம் புலம்பும் கதையே.

பார்ப்பனியத்தில் அய்யர் அய்யங்கார் பெண்களையும் சூத்திரனாக கருதுவது ஏன் என்ற கேள்விக்கும் இதில் விடை உள்ளது. ஆம் , சாதி அய்யர் அய்யங்காரராக இருந்தாலும், அந்த சாதிப்பெண்கள் வர்ணத்தில் பிராமின் அல்ல. சூத்திரர்களே. மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த பிராமின்கள் தங்களோடு பெண்களை அழைத்து வந்ததாக வரலாறு இல்லை. அவர்கள் இந்த நிலப்பகுதியில் இருந்த திராவிடப் பெண்களையே மணந்தார்கள் அல்லது அடிமையாக்கினார்கள். அதனாலே அவர்களுக்கு இந்தப் பெண்கள் மீது ஒவ்வாமை. பரசுராமன் என்ற ஒருவன் தாயைக் கொன்றதும் இதனால்தான். அவன்களில் எவனும் தந்தையைக் கொன்றதாக கதை இருக்காது. பெண்களை அவமானப்படுத்தும் அவர்களின் நோக்கம், அவர்கள் இந்த மண்ணின் பெண்கள் என்பதாலேயே. 

பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டங்கள் வந்தபோது, அதை எதிர்த்து தந்தி அனுப்பிய 1000 பெண்கள் அனைவரும் இந்த பார்ப்பன குடும்ப பெண்களே.

இந்த வீடியோ பார்த்த போது மேலும் சில வீடியோக்களைப் பார்த்தேன்.

நானும் திராவிட இயக்கத்தவன்தான் என்ற காமராசர் | பேரா. நாகநாதன்
https://www.youtube.com/watch?v=TCrhJeHrWHw


இவர் சொல்வதில் இருந்து சில முத்துகள்.

புத்தரின் சீடர்களைவிட நல்ல சீடர்கள் கிடைத்தது பெரியாருக்கு.
அண்ணா, கலைஞர்,நாவலர்,அன்பழகன் என்று.

பெரியார் கூட்டத்தில், கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஒரு மாணவனை பிறர் கண்டித்த போது, "அவர் காலை அவர் மீதுதானே போடுகிறார். என் மீதா போடுகிறார் அவர் அப்படியே இருக்கட்டும் என்கிறார் பெரியார். மேலும், "கைமேல் கைவத்து கைகளைக் கட்டி இருக்கிறாயே, அது என்ன கைக்கு ஒரு மரியாதை? காலுக்கு மரியாதை? ஒரு கையை மற்றொரு கைமீது கட்டி அமரும் போது, ஒரு காலை இன்னொரு காலின்மீது போட்டு அமர்ந்தால் என்ன தவறு?" என்று கேட்கிறார்.

ஆம் பெரியர் அரக்கனே. சேகுவார போல, தன் தமிழ்நாடு தாண்டியும் பிற நாட்டுக்குச் (கேரளம்) சென்று போராடியவர் பெரியார். "அல்ப கேசு" புமாமோக்கும் அவரின் கதபொக் அடிமைகளுக்கும் இது புரிய வாய்ப்பே இல்லை.


No comments:

Post a Comment