Friday, October 08, 2010

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்

 சி றையில் இருக்கும் Liu Xiaobo விற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து சீனாவிற்கு இனிமா(enema) கொடுத்துள்ளது நோபல் கமிட்டி.


China Angered By Selection of Dissident Liu Xiaobo for Nobel Peace Prize
http://abcnews.go.com/International/china-angry-nobel-peace-prize-dissident/story?id=11830948


நோபலின் அமைதிப்பரிசு என்பது அரசியல் சதுரங்கத்தில் நடத்தப்படும் காய்களின் நடவடிக்கை போன்றது. அதன் மர்மங்கள் விளையாடுபவர்களுக்கே வெளிச்சம்.   (பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா ) சீனாவின் கம்யூனிசக் கொள்கைகளையும் அதன் மனித உரிமை அத்து மீறல்களையும் (இந்தியா ஒழுங்கா??  Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India) மறுபடியும் பேச இந்தப்பரிசு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அதற்காக நோபல் கமிட்டிக்கு ஒரு "" போடலாம்.

மதங்கள் போல எல்லா இசங்களும் ஒரு பகுதியில் ஒரு கால கட்டத்தில் சூழ்நிலைகளின் நிர்பந்தங்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே.  இயேசு (Yahushua . Greek form for the common Hebrew name Joshua) என்று சொல்லப்படுபவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் கிடையாது(??) .  யூத மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடிய ஒரு போராளி. அவர்காலத்தில் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லத்துணிந்தவர் என்ற அளவிலேயே அவரை நான் பார்க்கிறேன்.  இன்று உள்ள கிறித்துவ மதமும் அது சார்ந்த பல  உட்பிரிவுகளும் தனது பெயரில் தோற்றுவிக்கப்படும் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.  அது போலவே புத்தனும். பொண்டாட்டி பிள்ளைகளை நடு இரவில் விட்டுவிட்டு ஓடிப்போன சித்தார்த்தன் எனது பார்வையில் எந்தச் சிறப்புத்தகுதியும் கொண்டவராகத் தெரியவில்லை. இருந்தாலும் அவரின் தேடலுக்காக அவர் சில சமரசங்களைச் செய்ய நேரிட்டது என்று கொள்ளலாம். அவரும் தனது பெயரில் ஒரு மதம் ஆரம்பிக்கப்பட்டு இப்படி தன்னை கடவுளாக்குவார்கள் , தனது பெயரிலேயே இலங்கையில் கொலை நடத்துவார்கள்  என்று தெரிந்திருக்கமாட்டார்.

உலக அளவில் இன்று நடக்கும் கம்யூனிச கருத்துரைகளும் இப்படித்தான் உள்ளது. தோற்றுவித்தவருக்குப்  பின்னால் மதமாகிப்போன இடியாப்ப சித்தாந்தங்கள் போல , கம்யூனிச கருத்துக்கள் கொத்துபரோட்டாவாக மாறிவிட்டது. இந்தியாவில் இருக்கும் அனைத்து சிகப்புக்கொடி கூட்டங்களும் குருடன் யானையைத் தடவிய கதையாக ஆளுக்கொரு காலையும் சிலர் வாலையும் பிடித்துக்கொண்டு சுயமிழந்த சொம்பாக அவர்களுக்கான சில அடையாளங்களை பூசிக்கொள்கிறார்கள்.

கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது. இந்த சித்தாந்தம் தோன்றிய கால‌கட்டத்தை ஆராய்வது  இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.

உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம். கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.

http://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf

மார்க்ஸ் இறந்தபிறகு கூட , எங்கெல்ஸால் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டது. ( ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மார்க்ஸ் எங்கெல்ஸ் சரிபார்ப்பார்கள்) கம்யூனிச‌‌ம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் வேறு எந்த புண்ணாக்க்கு கட்சிக் கொள்கைகளையும் பார்ப்பதற்குமுன் ,  ஆரம்பிக்க வேண்டிய இடம் இந்த மேனிவஸ்ட்தான்.

இந்த 68 பக்க அறிக்கைதான் உலகில் பலரால் பலவாறு அமுலாக்கம் செய்யப்பட்டது.
  1. லெனினின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  2. மாவோவின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  3. பிடலின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  4. சேயின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  5. கிம் (வட கொரியா) கம்யூனிச‌‌ அமலாக்கம்
இவை அனைத்திற்கும் ஒரே மூலம்தான். இந்த 68 பக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அவரவர் அவருக்கான சமையலை அவர்களின் வாய்ருசிக்கு ஏற்ப செய்தார்கள். அதில் எந்த அளவிற்கு மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது அவரவருக்கு வெளிச்சம். ஆனால் ஒவ்வொருவரின் அமுலாக்க அணுகுமுறையும் முற்றிலும் வேறு வேறானது. அதனால்தான் அது லெனினிசமாகம், மாவோசிசமாகவும் அறியப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் கம்யூனிசம் என்பது ஒரு வகையான சாம்பார். யாரை எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கொள்கைகள் இந்த 68 பக்க அறிக்கையில் இருந்து எதைக் எடுத்துக் கொள்கிறது என்று பார்த்தால் தெளிவின்மைதான் இருக்கும்.

இந்தியாவிலும் பிரிவினை வர்க்கம் சார்ந்தது என்றாலும் அதைவிட முக்கிய மையம் வர்ணப்பிரச்சனை.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் 68 பக்க அறிக்கையில் தொழிலாளி வர்க்கம் இருக்குமே தவிர வர்ணம் இருக்காது. அவர்களுக்கு இந்தியாவில் இருந்த வர்ணம் சார்ந்த அடக்குமுறைகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை. மேலும் அவர்களின் சூழலும் இந்த அறிக்கை தோன்ற ஊக்கியாக இருந்த காரணிகளும் அன்றைய இந்தியச்சூழலுக்கு அந்நியமானவை. இந்திய சூழ்நிலைக்கான சித்தாந்தம் கம்யூனசித்தை அடிப்படையாகக் கொண்டாலும் இந்திய பிரச்சனைகளை பேசுவதற்காக இருக்க வேண்டும்.

அரேபியா பெண்கள் மணற்புயலில் இருந்து பாதுகாக்க போட ஆரம்பித்த (நபி மற்றும் இஸ்லாமிற்கு முன்னரே இருக்கும் பழக்கம்) முழுச்சொக்காயை தமிழகத்த்லும் போடுவது போல, 68 பக்க அறிக்கையை அப்படியே இந்தியாவில் அமுல்படுத்த முடியாது. எப்படி லெனின் அவரது நிலப்பரப்பிற்கு தோதாக அதை அமுல்படுத்தி லெனினிசமாக ஆக்கினாரோ (அது வெற்றியா தோல்வியா என்பது இப்போதைய விவாதம் அல்ல) அதுபோல இந்தியாவின் வர்ணப்பிரச்சனைகளையும் பேசக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும்.

வர்க்க பேதத்துடன் வர்ணபேதத்தையும் சேர்த்து மேலும் மற்ற மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசும் இசம் வேண்டும் நமக்கு. இந்தியாவில் ஒரு கம்யூனிசத்திற்கு மற்ற ஒன்று போலி. :-(((( அப்படித்தான் அழைத்துக் கொள்கிறார்கள். பிழைப்புவாதக் கூட்டணிதான் பெரும்பாலும் இருக்கிறது. 68 பக்க அறிக்கை எந்தனை பேருக்கு இன்னும் பைபிளாக உள்ளது என்று தெரியாது. கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

எந்த ஒரு அமைப்பும் "Why they exists as political party or an organization?"
என்று அவர்களுக்குள் கேட்டுக்கொள்ளல் அவசியம்.


தகவலுக்கு:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா
http://kalvetu.blogspot.com/2009/11/blog-post_17.html

India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


.

23 comments:

  1. கம்யூனிசம் தற்பொழுது ஒரு மதம் ஆகிவிட்டதை ஒப்பு கொள்கிறேன்!

    ReplyDelete
  2. ஒரு மதவாதி எப்படி தன்பக்க குறைகளை ஒப்பு கொள்வதில்லையோ அதையே தான் கம்யூனிசவாதிகளும் செய்கீறார்கள்!

    நோபடீஸ் பெர்ஃபெக்ட் என்பது சரிதான் போல!

    ReplyDelete
  3. .

    வால்,
    இன்றைய கம்யூனிசம் ஒரு மதமே. மதத்திற்கு உரிய அத்தனை அம்சங்களும் வந்துவிட்டது அதற்கு. நிச்சயம் மார்கஸும் எங்கெல்சும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது எனது எண்ணம்.

    ***


    "நோபடீஸ் பெர்ஃபெக்ட்"

    யாருமே பெர்பெக்ட் கிடையாது என்று சொல்வது சரியில்லை என்பது எனது எண்ணம்.

    ஒவ்வொருவரும் தினசரி வாழ்க்கையில் பல தொப்பிகளை அணிகிறார்கள். ஒரு வலைப்பதிவராக நான் பெர்ஃபெக்ட் இல்லாதவனாக இருக்கும் அதே சமயத்தில் ஒரு தகப்பனாக பெர்ஃபெக்ட் ஆக இருக்க வாய்ப்பு உண்டு. அதே சயமம் நல்ல கண்வனாக இருக்கிறேனா என்றால் அது வேறு தொப்பி.

    எனவே தனி மனிதன், அவனின் தொப்பி, நேரம், சூழல்..இன்னபிறவும் பார்க்கப்படவேண்டும்.

    மேலும் பெர்ஃபெக்ட் என்பதே "யாருடைய பார்வையில்?" என்று கேட்கத் தோன்றும்.

    கணவனின் பார்வையில் பெர்ஃபெக்ட் மனைவியாக இருக்கும் ஒரு பெண் மாமியாரின் பார்வையில் "என் மகனுக்கு ஏத்த மனைவியாய் இவள் இல்லை" என்று சொல்ப்பட வாய்ப்பு உண்டு. இங்கே அவள் அணியும் தொப்பி "மனைவி" ஆனால் அது யாருடை அளவு கோளின்படி "பெர்ஃபெக்ட்" அளக்கப்படுகிறது என்பதும் முக்கியம்.

    புறக்காரணிகளின் பங்கு முக்கியமானது. அனைவரும் சூழ்நிலையின் பங்குதாரர்கள். தனிநபர் என்ற ஒருவர் இல்லை.

    ***

    நன்றி வால்
    நன்றி எஸ்.கே

    ReplyDelete
  4. "நோபடீஸ் பெர்ஃபெக்ட்"

    நான் சொல்ல வந்ததது, கம்யூனிசமும் முழுமையடையாத இஷம் என்று சொல்ல,அதற்கு தான் இப்படி சொல்லிட்டேன்!

    பெர்ஃபெக்‌ஷன் என்பது ஆளாளுக்கு மாறும் என்பதால், மனிதர்களை இதில் இழுக்க தேவையில்லை தான்!

    ReplyDelete
  5. ///கம்யூனிசமும் முழுமையடையாத இஷம் ///

    இது தான் விசம் வால்....
    இந்த கிருமிய தான் நிறய பேரு பரப்பிகிட்டு இருக்காங்க!

    இந்த கருத்துக்கும், மனிதர்களின் வாழ்நிலை புறக்காரணிதான் காரணம்! :)

    ReplyDelete
  6. கம்யூனிசம் பற்றி விரிவாக்க பேச இங்கே (இந்தியாவில்) பெரிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. கரணம் இங்கே எந்த தலைவனும் பொதுஉடமை மனப்பான்மை இல்லாதவன். கம்யூனிசம் தப்பானது இல்லை, இங்கே கம்யூனிசம் பேச யாருக்கும் தகுதி இல்லை.
    தோழமையுடன் இல்லை, ஆனால்
    நட்புடன்,
    கார்த்திக்.

    ReplyDelete
  7. தோழர் என்ன இப்படி ஆயிட்டீங்க

    ReplyDelete
  8. அவரை சொல்றிங்களா, என்னை சொல்றிங்களா?

    ReplyDelete
  9. .

    தியாகு

    Rowthiran

    அக்காகி

    வந்தமைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி!

    .

    ReplyDelete
  10. தோழர் கம்யூனிசம் மதமாகிடுச்சு என்பதில் உடன்பாடில்லை

    சில கம்யூனிஸ்டுகள் மதவாதிகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள்னு சொல்லுங்க

    ReplyDelete
  11. நண்பர் கல்வெட்டு எழுதிய பதிவை படித்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

    அதில் காணப்படும் வரிகள் தாம் இவை

    http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html

    //கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது. இந்த சித்தாந்தம் தோன்றிய கால‌கட்டத்தை ஆராய்வது இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.

    உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம். கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.//


    கல்வெட்டு கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையையும் எப்படி பைபிள் என சொல்லலாம்

    ReplyDelete
  12. மிக தவறான புரிதல் .

    உலகை புரிந்து கொண்டால் மற்றும் போதாது அதை மாற்றவேண்டும் என சொன்ன
    மார்க்ஸ்
    உலகை உன்னால் புரிந்து கொள்ள முடியாது அதற்கு அடங்கி போ நீ பாவி என சொல்லும்
    மதங்கள் எங்கே

    மதம் என்பது ஒரு அபினி என சொன்ன மார்க்சியத்தை நீங்கள்
    மதம் என சொல்வதன் மூலம் யாருக்கு ஆதரவாக போகிறீர்கள்

    உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் சரி முதலாளிவர்க்கத்துக்கும் சரி
    சரியான தீர்வை வழங்கியது கம்யூனிச சிந்தனைகளும் மார்க்ஸ் வகுத்தளித்த
    பொருளாதார கோட்பாடுகளும்தான்

    உங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுங்கள் அல்லது விவாதம் செய்து
    நிரூபியுங்கள்

    ReplyDelete
  13. .

    தியாகு,

    நான் கம்யூனி‌சத்தின் அடிப்படை அல்லது மூலம் அல்லது கம்யூனிசித்தின் ஒரே அடிப்படை என்று சொல்வது , க‌ம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் மட்டும்தான். பகிரங்கமாக வெளியான அறிவிப்பு மற்றும் கொள்கை என்பதால். அதையொட்டியே அதாவது இதுதான் அடிப்படை என்பதை வலியுறுத்தவே அதை பைபிள் என்று சொன்னேன்.

    அதிகம் தெரிந்த ஒன்றுடன் ஒப்பிட்டுச் சொல்லவேதவிர மற்ற ஒரு நோக்கமும் இல்லை.

    மதங்களுடன் கம்யூனி‌சத்தை ஒப்பிடுவது கம்யூனி‌சத்திற்கு கேவலம் என்பதை நான் அறிவேன்.

    .

    ReplyDelete
  14. நீங்கள் வினவுடன் முரண்பட்டமையால்
    மொத்த கம்யூனிசத்தின் மீதும் மதசாயம்
    பூசுவதாக கருதினேன் ஆனால் உங்கள்
    விளக்கமும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
    ஒரு மதநூல்போல அடிப்படையாக இருக்கு என்பதும் தவறுதானே

    ஏனெனில் பைபிளில் சொல்லி இருக்கு
    சொல்லி இருக்குன் கண்ணமூடிட்டு மார்க்சின் அறிக்கையை யாரும் ஏற்றுகொள்வதில்லையே
    நடைமுறை நிலமைகளில் பரிசீலித்துதானே
    ஏற்றுகொள்கிறோம்

    ReplyDelete
  15. .

    தியாகு,

    //ஆனால் உங்கள் விளக்கமும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
    ஒரு மதநூல்போல அடிப்படையாக இருக்கு என்பதும் தவறுதானே ஏனெனில் பைபிளில் சொல்லி இருக்கு சொல்லி இருக்குன் கண்ணமூடிட்டு மார்க்சின் அறிக்கையை யாரும் ஏற்றுகொள்வதில்லையே நடைமுறை நிலமைகளில் பரிசீலித்துதானே ஏற்றுகொள்கிறோம்//


    ஒரு சித்தாந்தம் தோன்றிய வரலாற்றுப்பின்னனியை ஆராய்வது அல்லது அறிந்து கொள்வது அதை மேலும் புரிந்து கொள்ள உதவும். கம்யூனிசம் தோன்றிய காலத்தில் இருந்த நிர்ப்பந்தங்களையும் இந்தக்காலத்தில் இருக்கும் நிர்பந்தங்களையும் ஓரளவு பிரித்துப் பார்க்கமுடிகிறது. அதன் அடிப்படையில், எல்லாக் காலத்திற்கும் எல்லா சூழலுக்கும் நிலப்பரப்பிற்கும் ஏற்ற ஒன்றாக எந்த ஒரு சித்தாந்தங்களையும் என்னால் ஏற்கமுடியவில்லை.

    கண்ணமூடிட்டு மார்க்சின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் (எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும்) நடைமுறை நிலமைகளில் பரிசீலித்துத்தான் ஏற்றுகொள்ளவோ அல்லது மாற்றவோ வேண்டும். அதுதான் எனது நிலையும்.

    எப்படி புதிய கணிதச் சூத்திரம் வரைய ஆரம்பிக்கும்முன் கணித அடிப்படை குறித்த சரியான அறிமுகம் அவசியமோ அது போல அந்த மேனிவெஸ்ட் ஒரு அடிப்படை என்று சொல்கிறேன். அதை அப்படியே பின்பற்றவேண்டும் என்று அல்ல.


    ***

    //நீங்கள் வினவுடன் முரண்பட்டமையால் மொத்த கம்யூனிசத்தின் மீதும் மதசாயம் பூசுவதாக கருதினேன்//

    இல்லை வினவாகட்டும் அல்லது யாரக இருப்பினும் அனைவருமே அந்த 69 பக்க அறிக்கையை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்றும் அதை எப்படி அமுலாக்கம் செய்கிறார்கள் என்றும் பார்த்து அதனுடன் மட்டுமே முரண்படுபவன்.

    எனது வருத்தம் , அந்த தலைவர்களை வெறும் படமாகமட்டும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும், அவர்களின் பெயர்களின் புனிதத்தைக் காக்க முயல்வதிலும் நேரம் செலவழிப்பவர்கள் மீதுதான். :-((

    .

    *

    ReplyDelete
  16. //கல்வெட்டு கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையையும் எப்படி பைபிள் என சொல்லலாம் //

    பைபிள்னா கெட்டவார்த்தை இல்லை தியாகு, புனிதநூல்னு அர்த்தம்! எந்த கம்யூனிஷ்டும் இல்லை என்று மறுக்க மாட்டான்!

    ஒருமுறை பொருட்களுக்கு மதிப்பளிக்க தேவையில்லை என்று வாதாடிய ஆபிரஹாம மதத்தை சேர்ந்த நண்பரிடம் உங்களது வேதநூலை தலைக்கு வைத்து தூங்குவிங்களான்னு கேட்டேன், அவர் மறுத்துவிட்டார்!

    கம்யூனிஷ்டு கட்டுடைத்தலில் கை தேர்ந்தவர்கள் என்பதால் இதில் விதிவிலக்காகலாம்!

    ஆக மொத்தம் என் கருத்துபடியும், தனிதன்மை இழந்து கூட்டம் சேர்ந்துட்டாலே அது ஒரு மதமாகிறது, அந்த மதத்திற்கு எதாவது கட்சி பெயரோ, குழுமம் என்ற பெயரோ, சங்கம் என்ற பெயரோ வைத்துக்கொள்ளலாம்!

    அதற்கு கடவுளாக ஒரு தலைவன், பக்தர்களாக தொண்டர்கள்! வழிபாட்டுமுறைகள் மட்டும் மாறுகிறது, ஆனாலும் அடிப்படையில் ஒன்று தானே!

    :-)

    அந்த ஸ்மைலி உங்களுக்கு தான், என்று ஏங்கல்ஸ், மார்க்ஸை விட்டு ஒருவன் வெளி வருகிறானோ அவனுக்கு கம்யூனிசம் மதமில்லை என்று சொல்ல தகுதி வரலாம், அதற்கு சாத்தியம் இருக்குன்னு நினைக்கிறிங்களா!?

    ReplyDelete
  17. //உலகை புரிந்து கொண்டால் மற்றும் போதாது அதை மாற்றவேண்டும் என சொன்ன
    மார்க்ஸ்
    உலகை உன்னால் புரிந்து கொள்ள முடியாது அதற்கு அடங்கி போ நீ பாவி என சொல்லும்
    மதங்கள் எங்கே//


    அடங்கி போதல் மதம் என்றால், அடக்குதல் பார்பனீயமாகிறது, நாம் முழுவதுமாக ஒருவருடன் உடன்பட முடியாத பட்சத்தில் மாற்றுதல் என்பது ஒருதலைபட்ச நியாயமாக தானே இருக்கும்!

    நான் பத்து மணிநேரம் தான் வேலை செய்வேன் என்பவனிடம் போய் அதெல்லாம் முடியாது, மீறி வேலை செஞ்சா கையை வெட்டுவேன் என்றால் நல்லாவா இருக்கும்!

    ReplyDelete
  18. //ஏனெனில் பைபிளில் சொல்லி இருக்கு
    சொல்லி இருக்குன் கண்ணமூடிட்டு மார்க்சின் அறிக்கையை யாரும் ஏற்றுகொள்வதில்லையே
    நடைமுறை நிலமைகளில் பரிசீலித்துதானே
    ஏற்றுகொள்கிறோம் //

    பெரியாரிஸ்டுகள் இன்றும் அதே பேச்சை காப்பி பேஸ்ட் செய்கிறார்கள், பல வருடங்களுக்கு முன்னால் இருந்த வேதத்தை பின்பற்றும் மதவாதிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்!.

    நடைமுறை நிலைமைக்கு சாதகமாக புரிந்து கொள்ளுதல் வேறு, புத்தகங்களின் படி அதை மாற்றி அமைக்க முயல்தல் வேறு தானே! உலகிலேயே மார்க்ஸும், ஏங்கல்ஸும் மட்டுமே புத்திசாலிகள் மற்றவர்கலெல்லாம் அதை பின்பற்றுவது தான் முறை என்ற கோட்பாட்டை தானே கன்யூனிசம் மறைமுகமாக முன்வைக்கிறது!

    ReplyDelete
  19. வால்பையன்

    எட்டுமணிநேரம் அடிப்படை வேலை என்பதை ஏன் கோரிக்கையாக வைக்கிறார்கள்

    இப்படி வேலை நேரத்தை நிர்ணயிக்க சொல்வது மத கோட்பாடாகுமா ?

    ReplyDelete
  20. //நடைமுறை நிலைமைக்கு சாதகமாக புரிந்து கொள்ளுதல் வேறு, புத்தகங்களின் படி அதை மாற்றி அமைக்க முயல்தல் வேறு தானே! உலகிலேயே மார்க்ஸும், ஏங்கல்ஸும் மட்டுமே புத்திசாலிகள் மற்றவர்கலெல்லாம் அதை பின்பற்றுவது தான் முறை என்ற கோட்பாட்டை தானே கன்யூனிசம் மறைமுகமாக முன்வைக்கிறது!//

    என்னங்க இப்படி புரிஞ்சுட்டு இருக்கீங்க

    நண்பர் கல்வெட்டு இதே கருத்தை முன்வைக்கிறாரா என தெரிந்து கொண்டு நான் மேற்கொண்டு பேசுகிறேன்

    ReplyDelete
  21. தாஸ் கேபிடல் தான் அவர்களின் பைபிள். மேனிஃபெஸ்டோ கூட அடுத்ததுதான். இந்த தாஸ் கேபிடலின் ஆணிவேர் ‘உபரி மதிப்பு’ ; அதாவது labour theory of surlpus value. உபரி என்பது தொழிலாளர்களின் உழைப்பினால் மட்டும் (ரிப்பீட் : மட்டும்) உருவாகிறது என்ற ‘விஞ்ஞான’ பார்வை. இது மகத்தான தவறு என்று நிருபனமாகி பல ஆண்டுகள் ஆகின்றனர். பார்க்கவும் :

    http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
    'உபரி மதிப்பு என்னும் மாயயை'

    ReplyDelete
  22. கல்வெட்டிடம் அரசியல் நிறைய படிக்க ஆவலாய் உள்ளேன்.இந்த 68 பக்க அறிக்கை பற்றி எல்லாம் துளியும் தெரியாத ஒருவன் நான்.

    ReplyDelete