Wednesday, February 12, 2020

மெல்லச் சொருகும் கத்தி-1: I-PAC Prashant Kishor

மெரிக்க டெமாக்ரடிக் கட்சி தேர்தலைக் கவனித்து வருகிறேன். அது குறித்து தொடர் கட்டுரைகளை முடிந்தவரை எழுத எண்ணம். டெல்லியில் பீசேபி யின் தோல்வி மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் , தனி நபர் ஒருவர் , தான் விரும்பும் கட்சிகளுக்கு ஏதோ ஒன்றைச் செய்து கொடுத்து, வெற்றிக்கு நானே காரணம் என்ற‌ அளவில் வளர்ந்து வருகிறார்.

சீமான், மோடி,அமித்துசா, கமல், போன்ற அரசியல்வாதிகள் அவர்கள் உளறும் கருத்துக்களுக்காவது பொதுவெளியில் பெறுப்பேற்க வேண்டும். ஆனால் எந்தவிதமான சட்ட நடைமுறைகளும், இல்லாத இந்தியாவில்,  I-PAC Prashant Kishor வளர்ச்சி என்னை கவலை கொள்ளச் செய்கிறது.

இராணுவ அமைச்சகத்தின் அறையில் இருந்தே ரபேல் ஆவணங்கள் காணாமல் போனது. ஆதார் தகவல்கள் தனியாருக்கு கிடைக்கிறது. இன்று NRC தகவல்கள் காணோம் என்று எளிதாக காக்கா வடை எடுத்த கதைபோல் பேசுகிறார்கள்.
https://timesofindia.indiatimes.com/india/nrc-online-data-go-missing-authorities-say-cloud-storage-period-expired/articleshow/74086216.cms

இந்த நிலையில், யாரிடமிருந்து என்ன மாதிரியான தகவல்களை  திரட்டுகிறார்? எப்படி பயன்படுத்துகிறார்? சந்தையில் விற்பனைக்கு தயாராக இருக்கும் இவரின் சேவைக்கு, வெளிநாடு ஒன்று அதிக‌ விலை கொடுத்தால்  என்ன செய்வார் Prashant Kishor?
**
அமெரிக்காவில் 2016 அதிபர் தேர்தலில் நடந்த இரசியாவின் தலையீடு, இன்று இந்த தேசத்தின் பல அமைப்புகளைச் சிதைத்துகொண்டுள்ளது.

Roger Stone

Roger Stone  அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் ஆலோசகர் இவர். 2016 ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்புக்கு ஆலோசகராக இருந்தார். இவர் எப்படிப்பட்டவர் என்பதை, இவருக்கு கொடுக்கப்பட்ட அடைமொழிகள் மூலம் அறியலாம்.

"Self-Proclaimed Dirty Trickster", "Renowned Infighter", "Seasoned Practitioner of Hard-Edged Politics", "Mendacious Windbag", "Veteran Republican Strategist", Political Fixer.
https://en.wikipedia.org/wiki/Roger_Stone

ஆம், இவர் வல்லவர். பல சாகசங்களை நிகழ்த்தி 2016 ல் டொனால்டு ட்ரம்பை வெற்றிபெற வைத்தார். ரசிய நாட்டு உதவியுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில், இவர் விளையாண்டு, அதன் போக்கை ரிபப்ளிகன் வேட்பாளரான டொனால்டு ட்ரம்பிற்கு சாதகமாக மாற்றினார் என்பது இவர் மேலான குற்றச்சாட்டு. 2016 அதிபர் தேர்தல் முறைகேடுகளில் நேரடியாகச் செய்யாமல், டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஃகிளாரி கிளிண்டனின் மீது சேறு வாரியிறைத்தல். அதாவது இணையத்தில் பொய்ச் செய்திகளை பரப்புவது.

ன்று நான் இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் (Feb 11, 2020), Roger Stone க்கு எவ்வளவு வருடங்கள் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. அதுவும் அதிபர் தலையீட்டால் கேலிக்கூத்தாகிக்கொண்டுள்ளது.

All 4 federal prosecutors quit Stone case after DOJ overrules prosecutors on sentencing request
https://www.cnn.com/2020/02/11/politics/roger-stone-sentencing-justice-department/index.html

இந்தக் கவலைகள் எல்லாம் சேர்ந்து, I-PAC Prashant Kishor வளர்ச்சி ஏன் ஆபத்தானது? என்பதை இரண்டு கட்டுரைகளுக்குள் எழுத எண்ணம்.
.

1 comment: