Saturday, February 15, 2020

மெல்லச் சொருகும் கத்தி -3: ஆயிரம் மடங்கு கவனம் தேவை

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியாவின் தலையீடு இருந்தது என்றும், அது அமெரிக்காவின் நிலைத்தன்மையை சீர்குலைக்க இணையத்தில் பல பொய்த்தகவலகளைப் பரப்பியது என்றும், பெரிய குற்றச்சட்டு எழுந்து, அதை விசாரிக்க நியமிக்கப்பட்டவர்தான் ராபர்ட் முல்லர் (Robert Mueller ). இது 2017 மே மாதம் நடக்கிறது. இப்போது ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபர். ஆனால் பல்வேறு அழுத்தங்களால் ட்ரம்பின் மேற்பார்வையில் இருக்கும் "United States Department of Justice"  ன் Deputy Attorney General Rod Rosenstein முல்லரை இது குறித்து விசாரிக்க நியமிக்கிறார்.

முல்லரைப் பற்றியும், அமெரிக்க நீதித்துறையில் இருக்கும் சிலரின் நாட்டுப்பற்றையும் தெரிந்து கொள்ள நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டியது.
👇👇👇
Stellar Wind | James Comey | Robert Mueller | Nunes Memo
https://kalvetu.blogspot.com/2018/02/stellar-wind-james-comey-robert-mueller.html

நாட்டுப்பற்று என்பது, அதிகாரத்திற்கு ஆமாம் சாமி போடும் அடிமைத்தனம் இல்லை. அதிபரே சொன்னாலும், தனக்கு சரியென்று படாத ஒன்றைச் செய்யாத மன உறுதிதான் உண்மையான நாட்டுப்பற்று மற்றும் தான் ஏற்றுக்கொண்ட பதவிக்கு உண்மையாக இருந்தலும் ஆகும். அதிபர் சொன்னார், அமைச்சர் சொன்னார் என்று, அவர்கள் சொன்னதைச் செய்ய ஒரு அடிமை போதும். அதற்கு அதிகாரிகள் தேவை இல்லை.

ப்படியாக FBI, Central Intelligence Agency (CIA),National Security Agency (NSA) 
நடத்திக்கொண்டிருந்த புலனாய்வுகள், ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம்  ராபர்ட் முல்லரின் த‌லைமையிலான புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்படுகிற‌து.
வர் முதலில் கை வைத்து George Papadopoulos. அவரை அரசுத்தரப்பு சாட்சியாக கொண்டுவருகிறார். George Papadopoulos ன் மூலம் கிடைத்த தகவல்களின்படி காய் நகர்த்தப்படுகிற‌து. சுமார் இரண்டு வருடங்களாக நடந்த விசாரணையில், பலர் கைது செய்யப்படுகிறார்கள். வேறு வேறு வழக்குகளின் பெயரில், ஆனால் அவர்கள் அனைவரும் அதிபர் ட்ரம்பின் 2016 தேர்தலில் ரசியாவின் தலையீட்டு சிக்கலில் பங்கு கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் ராபர்ட் முல்லரின் விசாரணையால் அடையாளம் காணப்பட்டவர்கள்.

அப்படி தண்டனை பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.


Trump campaign chairman Paul Manafort 
National Security Advisor Michael Flynn (இவர் இன்னும் மேல் முறையீடு செய்து கொண்டுள்ளார்)

(Mueller indicted 13 Russian individuals and 3 Russian companies for attempting to trick Americans into consuming Russian propaganda that targeted Democratic nominee Hillary Clinton)

March 22, 2019, ராபர்ட் முல்லர் அவரின் இறுதி அறிக்கையை அளிக்கிறார். அவரின் இறுதி அறிக்கை குற்றங்கள் நடந்ததை உறுதி செய்கிறது. ஆனால், அமெரிக்க நடைமுறையில், அதிபராக இருக்கும் ஒருவரின்மீது நடவடிக்கை  எடுக்க அவரால் பரிந்துரைக்க முடியாத சட்டச் சிக்கலில், அவர் அறிக்கையை கொடுத்ததோடு போய்விடுகிறார்.


Steve Bannon
இவர் அமெரிக்காவில் வலதுசாரி அமைப்பில் அது தொடர்பான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானவர். Breitbart News. https://www.breitbart.com/ என்ற பத்திரிக்கையின் CEO ஆக இருந்தவர். இந்தைப் பத்திரிக்கை எப்படிப்பட்டது என்றால் 100 துக்ளக் பத்திரிக்கையின் வன்மததைக்கொண்டது எனலாம். வலதுசாரி , மதம் சார்ந்த, அடிப்படைவாத கருத்துக்களை திணிப்பதும், அதன் மூலம் ஒரு ஓட்டு வங்கியை கட்டமைத்து, அவர்களுக்கு தேவையான வேட்பாளர்களை கட்சிகளுக்குள் நுழைத்து, அவர்களை வெல்ல வைப்பது. 

மெரிக்காவில் இப்படி பல அமைப்புகள் உள்ளன. 2016 அதிபர் தேர்தலில் இவரும் ரிபப்ளிகன் வேட்பாளரான டொனால்டு ட்ரம்பிற்கு ஆலோசகராகிறார். ட்ரம்ப் 2016 தேர்தலில் வெற்றியும் பெற்று அதிபரானவுடன் இவருக்கு வெள்ளை மாளிகையில் Chief Strategist  பதவியும் கொடுக்கிறார் ட்ரம்ப்.

Cambridge Analytica Ltd (CA)
Cambridge Analytica Ltd (CA) என்பது தகவல் தொழில் நுட்பத் துறையில் , தகவல்களை அலசி ஆராய்ந்து அதனை வைத்து திட்டங்களை வகுக்கும் Data Analysis நிறுவனம். இலண்டனில் இதன் தலைமை அலுவலகம் இருந்தாலும் , இதற்கு அமெரிக்காவிலும் கிளைகள் உண்டு. இதை நிறுவியவர்களில் ஒருவர் Steve Bannon.

George Papadopoulos வேலை செய்ததும் இலண்டனில் உள்ள‌ London Centre of International Law Practice (LCILP) என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook–Cambridge Analytica data scandal
2016 தேர்தலின் போது Cambridge Analytica , பல தகவல்களை Facebook இடம் இருந்து திரட்டுகிறது. திரட்டிய தகவல்களை வைத்து, பல பொய்ப்பிரச்சாரங்களை திட்டமிட்டு, Facebook பயனர்களுக்கு targeted users, friends  விளம்பரமாக அனுப்புகிறது. இந்த செயலில் Facebook  மக்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு , Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார் அமெரிக்க காங்கிரசு சபையில்.

இவையெல்லாம் ஒவ்வொன்றும் அதற்கே உரிய சிக்கல்களைக் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்கள் நிறைந்தவை. 2016 ல் இருந்து இன்றுவரை அமெரிக்க தேர்தலில் ரசியாவின் பங்கு என்பது பெரிய சிக்கலாம இருந்துவருகிறது அமெரிக்காவிற்கு. அரசியல் காரணங்களுக்காக ரிபப்ளிகன் (ட்ரம்பின் கட்சி) இதைக் கண்டுகொள்ளாபல் இருக்க முயல்கிறார்கள். ஆனால் டெமாக்ரடிக் கட்சி இதை விடுவதாய் இல்லை.

முல்லரால் அதிபருக்குத்தான் தண்டனை பெற்றுத்தர முடியவில்லையே தவிர, இந்த 2016 அதிபர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட முக்கியமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையும் வாங்கிக் கொடுத்தார். அப்படி தண்டனை பெற்ற ஒருவர்தான் Roger Stone நாம் முதல் கட்டுரையில் பார்த்தவர்.

மெல்லச் சொருகும் கத்தி-1: I-PAC Prashant Kishor
https://kalvetu.blogspot.com/2020/02/1-i-pac-prashant-kishor.html

ன்றுவரை அமெரிக்கா இந்த 2016 தேர்தலில் ரசியா என்ன செய்தது எப்படிச் செய்தது என்று பல விசாரணைகளை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் பல நல்ல அதிகாரிகள் உள்ளார்கள். அதிபரே சொன்னாலும் வெகு சாதரணமாக நடுவிரலைக் காட்டிவிட்டு போய்விடுவார்கள்.

ஆம், அதிபருக்கு நடுவிரலைக் காட்டிய ஒரு சாதரண பெண் , அவர் செய்த செயலால் வேலையை இழந்தார். ஆனால், அவரையே அந்த கவுண்டியின் Board of Supervisors ஆக அந்த மக்கள் தேர்ந்தெடுத்தது வரலாறு. பொது மக்களின் கருத்துச் சுதந்திரமும், அவர்களின் அன்றாட அரசியல் ஈடுபாடும், இந்தியாவில் இல்லாத ஒன்று.

Woman Who Lost Job After Flipping Off Trump's Motorcade Wins Election in Virginia
https://time.com/5719601/juli-briskman-trump-middle-finger-virginia-election/
***
ந்தியாவில், இன்று வளர்ந்து வரும் இந்த பிரசாந்த் கிசோரை நான் பயத்துடனே பார்க்கிறேன். இவர் ஒருங்கிணைந்த நாடுகள் அமைப்பில் (United Nations) பலகாலம் வேலை பார்த்தவர். பன்னாட்டுத் தொடர்புகள் நிச்சயம் இருந்திருக்கும். அதைவிட நான் பயப்படும் விசயம், இவர் "குசராத் கோத்ரா இரயில் எரிப்பு" சம்பவங்களுக்கு பிறகும், மோடிக்காக உழைத்தவர். நல்ல மனநிலையில் உள்ள யாரும் இதைச் செய்யவே மாட்டார்கள். ஒரு அரசியல்வாதியாக கட்சிக் கூட்டணி என்பதுகூட ஏதோ பதவி ஆசை அல்லது, கொள்கைகளில் சமரசம் செய்து ஏதோ ஒரு நல்லதை அடைய நினைக்கிறார்கள் என்று மன்னிக்கலாம். ஆனால்,இவர் தனி நபராக, ஒரு நிறுவனமாக மோடியை மறுபடியும் முதல்வராக்கியவர் என்று அறியப்படுகிறார். அதே மோடியை பிரதமராகவே ஆக்கியவர் என்றும் அறியப்படுகிறார்.

னது கவலை அதிகரிக்குமிடம் இதற்குப் பிறகுதான் வருகிறது. மோடிக்காக வேலை பார்த்த இவர், பீசேபியின் எதிர் அணிகளாகவே பார்த்து சேர்கிறார். அது ஏன்? ஒரு நிறுவனமாக காசு அதிகம் கொடுப்பவர்களிடம் இவர் வேலை செய்வது இல்லை. இவரே தேர்ந்தெடுக்கிறார். அது கவலை கொள்ளச் செய்கிற‌து.
**
ன்றைய  மிழ் நாட்டுச் சூழலில் அவசியம் திமுக பெற்றேயாகவேண்டும். பல காலமாக வளர்த்த சமூகநீதி முன்னேற்றங்கள் எல்லாம், பீசேபியின் பினாமியாகச் செயல்படும் அதிமுக அரசால் நாசம் செய்யப்படுகிறது. எனவே 2021 தேர்தலில், நமக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்களால் உதவி வருகிறதோ இல்லையோ, அவர்களின் உதவி எதிரணிக்கு போய்விடாமல் பார்ப்பது முக்கியம்.

பிரசாந்த் கிசோரை திமுக வாங்க்கியுள்ளதை நான் இந்த தேர்தலில் மேற்சொன்ன காரணக்களுக்காக வரவேற்கிறேன். அதே நேரம் இவரிடம் நாம் என்ன பகிர்கிறோம் என்பதிலும், எந்த அளவு இவரை நம்புகிறோம் என்பதிலும் கவனம் தேவை.

காந்தி என்ற வைசியர், ஒரு சனாதன வர்ண ஆதரவாளர். ஆனால் அவரையே கொன்றார்கள் சித்பவன் பிராமினான கோட்சே கூட்டம். ஏன் என்றால், அவர்களுக்கு இசுலாம் எதிர்ப்பு என்பதே முக்கியம். காந்தி அதற்கு எதிர் நிலையில் இருந்ததாலே கொல்லப்பட்டார்.

மூகச் சமநீதி இயக்கமான, வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மரியாதை இயக்கமான திமுக, இன்றுவரை வடக்கு மக்களையும், தமிழக பிராமிண் வர்ணத்தினரையும் உறுத்தும் ஒன்று. அவர்கள் திமுக உடகட்டமைப்பை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் விசம் தோய்ந்த மனிதர்கள். அவர்களின் கத்தி இந்திய சனநாயகத்தில் காலம் காலமாக மெல்லச் சொருப்படும் ஒன்று. நாம் ஆயிரம் மடங்கு கவனமாக இருக்க வேண்டும். அதுவே என் ஆசை மற்றும் இக்கட்டுரையின் நோக்கம்.

-நன்றி‍-
மெல்லச் சொருகும் கத்தி-முற்றும்.

தகவல்கள்
https://en.wikipedia.org/wiki/Cambridge_Analytica

https://en.wikipedia.org/wiki/Robert_Mueller

No comments:

Post a Comment