Sunday, February 16, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம் 4: கட்சித் தலைமை உங்களை விலக்க முடியாது!

ட்சியின் தலைமைக்கு எதிராக அல்லது கொறடா போன்ற நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டாலோ, கட்சியின் கொள்கைகளை , ஒரு குறிப்பிட்ட விசயத்தில் விமர்சித்தாலே கட்சியை விட்டு விலக்கிவிடுவார்கள் நம்மூரில். இந்த காரணத்தினாலேயே, தனக்கு பிடிக்காவிட்டாலும் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து வாக்களிக்க பலர் தயங்குகிறார்கள் இந்திய அரசியல் நடைமுறையில். இது ஒரு உண்மையான சனநாயகமாக எனக்குத் தெரியவில்லை.

மெரிக்காவில் டெமாக்ரடிக் கட்சி அல்லது ரிபப்ளிகன் கட்சியில் ஒருவர் சேருவதும்,விலகுவதும், அவரின் தனிப்பட்ட செயல். கட்சியின் தலைமை அல்லது பொறுப்பாளர்கள் எந்த ஒரு தனி நபரையும் விலக்கமுடியாது. அதுபோல, கட்சியில் சேர யாருடைய‌அனுமதியும் தேவை இல்லை. இவை அனைத்தும் Self Declaration தான். இன்று நானாக டெமாக்ரடிக் கட்சி என்று அறிவித்து அதைப் பதிவு செய்யலாம். நாளை அதில் இருந்து நானாக விலகலாம். நாளை மறுநாள் ரிபப்ளிகன் கட்சியில் என்னை இணைத்து பதிவு செய்யலாம். எந்தக் கட்சியிலும் சேராத Independent Voter என்றும் பதிவு செய்யலாம்.

ந்த சுதந்திரம், கட்சியில் அடிமை முறையை அழிக்கிறது. கட்சியின் சார்பில் எந்த தேர்தலிலும் நீங்கள் போட்டியிட யாரின் அனுமதியும் தேவை இல்லை. எடுத்துக்காட்டாக, இந்த அதிபர் போட்டிக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்தலில் நீங்கள் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக போட்டியிட ,அந்தக் கட்சியின் தேசியத் தலைமை அல்லது மாவட்ட, உள்ளூர் நிர்வாகிகளின் அனுமதி தேவையே இல்லை. நீங்களாக உங்களை அறிவித்துக்கொண்டு களத்தில் இறங்க்கிவிடலாம். உங்களால் மக்களைக் கவர முடிந்து, நீங்கள் வென்றுவிட்டால், நீங்கள்தான் வெற்றி வேட்பாளர். ந்த முறை இருப்பதால், கட்சி சார்பில் தேர்தலில் நிற்க டிக்கெட் கேட்டு யாரையும் யாரும் கேட்கத் தேவையில்லை. கட்சி தலைமைக்கு சால்ரா அடித்து பிழைக்க வேண்டிய தேவையும் இல்லை. 
நீங்கள் மக்களைத் திரட்ட முடிந்து, வென்றுவிட்டால், நீங்களே அந்தக் கட்சியின் முகம். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு AOC என்று அறியப்படும் Alexandria Ocasio-Cortez தான். இவர் நியூயார்க் 14 வது மாவட்டத்தின் அமெரிக்க மக்களவை காங்கிரசு உறுப்பினர் (Member of the U.S. House of Representatives from New York's 14th district) . இவர் ஒரு ஓட்டலில் Waitress ஆகவும் Bartender ஆகவும் வேலை பார்த்த பட்டதாரிப் பெண். சமூகம் சார்ந்த பிரச்சனைகளால் உந்தப்பட்டு , அந்தப் பகுதியின் டெமாக்ரடிக் கட்சியின் பெரிய தலையான Joe Crowley,  என்பவரை எதிர்த்து 2018 ல் போட்டி போடுகிறார். Joe Crowley அந்த தொகுதியின்  Democratic Caucus Chair மட்டுமில்லாமல், அந்த 14 வது மாவட்டத்தின் காங்கிரசு உறுப்பினராக பத்து முறை இருந்த பெரும் புள்ளி. அவரை எதிர்த்து எங்கிருந்தோ வந்த இளம் பெண் , தன்னை டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக அறிவித்துக்கொண்டு களத்தில் இறங்குகிறார்.

டெமாக்ரடிக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் Joe Crowley தோல்வியடையச் செய்து, அந்தக் கட்சியின் டிக்கெட்டைப் பெற்று, பொதுத் தேர்தலில், ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் Anthony Pappas ஐ நவம்பர்,2018 ல் நடந்த தேர்தலில் தோற்கடித்து வெற்றிவாகை சூடுகிறார் AOC. இன்று இவர் டெமாக்ரடிக் கட்சியில் அமெரிக்க அளவில் மிகவும் நன்கு அறிமுகமான வெற்றி முகமகாத் திகழ்கிறார். இவர் பெர்னியின் ஆதரவாளர். இவரின் தேர்தல் வெற்றிக்கு பெர்னி தன் ஆதரவைத் தெரிவித்ததோடு களப்பணியிலும் இறங்கினார்.

ம்மூரில் உள்ளூர் மாவட்டச் செயலாளரை எதிர்த்து, கட்சியின் தலைமையின் அனுமதி இல்லாமல், ஒருவர் தேர்தலில் வென்று, அந்தக் கட்சியின் முகமாக மாறமுடியுமா? வெற்றி பெற்றாலும் கட்சியில் இருந்து விலக்கிவிடுவார்கள் சரியா? ஆனால், இங்கு வெற்றி பெற்றவரே கட்சியின் முகமகாக முவரியாக மாறிவிடுவார். 

கட்சியில் சேரவோ, தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக உட்கட்சி தேர்தலில் போட்டியிடவோ யாரின் அனுமதியும் தேவையில்லை. யாரும் யாரையும் விலக்க முடியாது.

ஆனால், ஏற்கனவே இருக்கும் கட்சி பொறுப்பாளர்கள், புதியவரை எதிர்த்து உள்ளடி வேலைகள் செய்யலாம். அவரை தோற்கடிக்க , கட்சிப் பொறுப்பாளர்கள் அவருக்கு எதிராக வேலை செய்யலாம்.

Party Delegates

டெலிகேட் என்பவர்கள் தனிமனிதர்கள். இவர்கள் அந்தக் கட்சியின் சார்பாக ஒரு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மாநிலத்தின் பிரதிநிதியாக, கட்சியின் தேசிய மாநாட்டில் (National Convention ) கலந்து கொள்வார்கள். அப்படி, அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் இந்த டெலிகேட்கள் சேர்ந்து, அந்தக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பதை,அந்த தேசிய கட்சி மாநாட்டில்தான் முடிவு செய்வார்கள். 

மாநிலங்களில் இப்போது நடக்கும் உட்கட்சி தேர்தல்கள் எல்லாம் ஒரு வேட்பாளர் எத்தனை Delegate களை அந்த மாநிலத்தில் பெறுகிறார் என்ற முடிவுகளே தவிர, அந்த மாநிலத்தில் அவர் வெற்றி பெற்றார் என்பது அல்ல. கட்சியின் வேட்பாளர் இவர்தான் என்று முடிவுசெய்வது, இறுதியில் ஒருவர் அமெரிக்க அளவில் மொத்தம் எத்தனை Delegates களைப் பெற்றார் என்ற கணக்கே தவிர , மாநில அளவில் அதிகம் பெற்றது தீர்மானிக்காது. இதனாலாதான், பல வேட்பாளர்கள் சில மாநிலங்களில் போட்டி போடுவதே இல்லை. எடுத்தகாட்டாக Iowa மாநிலத்தின் மொத்த Pledged Delegates களின் என்ணிக்கை 41. இது தேசிய அளவிலான டெமாக்ரடிக் கட்சியின் மொத்த Pledged Delegates களில் 1% அளவே. இங்கே செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் அதிக அளவு Delegates  எண்ணிக்கை உள்ள ஒரு மாநிலத்தில் செலவழிப்போம் என்று சில வேட்பாளர்கள் இப்படியான சின்ன மாநிலங்களை புறக்கணித்துவிடுவார்கள் உட்கட்சி தேர்தலில். கலிபோர்னியா மாநிலத்தின் மொத்த Pledged Delegates களின் எண்ணிக்கை 415. இங்கு பெறும் வெற்றியானது வேட்பாளரை முன்னணிக்கு கொண்டுவந்துவிடும். 

மைக்கேல் ப்ளூம்பெர்க் (Michael Bloomberg) என்பவர் பெரிய பில்லியனர். நியூயார்க் நகரத்தின் மேயராகவும் இருந்தவர். அவரும் இந்த 2020 டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில் களத்தில் குதித்துள்ளார். மற்றவர்கள் எல்லாம் Iowa and New Hampshire போன்ற மாநிலங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த போது , இவர் அவைகளை தவிர்த்துவிட்டு,அதிக அளவு Delegates களின் கொண்ட் மாநிலங்களில் கவனம் செலுத்திவருகிறார்.
Bloomberg Takes Untested Path to 2020, Skipping Key Contests 
https://www.bloomberg.com/news/articles/2019-11-25/bloomberg-takes-untested-path-to-2020-skipping-key-contests

மெரிக்கா முழுமைக்குமான Pledged Delegates 3,979  ஐ ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்ளவு என்று பிரித்து ஒதுக்குவார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள். ஒரு மாநிலம் எத்தனை Delegates களைப் பெறுகிறது என்பது ஒரு விகிதாச்சரக் கணக்கு. இது கொஞ்சம் சிக்கலானது. இன்றுவரை என்னை குழப்பிக்கொண்டே இருக்கும் ஒன்று. எழுதும் போது புரிந்ததுபோல இருக்கும், பிறகு நானே குழம்பிக்கொள்வேன். மிகவும் விரிவான கணக்கிற்கு இந்த தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளது.

👇👇👇👇

https://ballotpedia.org/Democratic_delegate_rules,_2020
//The number of delegates awarded to each state is determined by a formula that factors the state's popular vote for the Democratic nominee in the previous three elections, the state's electoral votes, and when the state's primary is held.//

ற்கனவே நடந்த தேர்தல்களில் அந்த மாநிலத்தில் எத்தனை பேர் பங்குகொண்டு வாக்களித்தார்கள், அந்த மாநிலத்தின் கவர்னர் ,மற்றும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்களின் என்ணிக்கை என்று ஒரு சிக்கலான கணக்கின் அடிப்படையில் ஒரு மாநிலத்திற்கான Delegates எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். இது முழுக்க முழுக்க ஒரு கட்சி சார்ந்தது. ஒரே மாநிலத்திற்கு டெமாக்ரடிக் கட்சியின் Delegates களின் எண்ணிக்கையும் , ரிபப்ளிகன் கட்சியின் Delegates களின் எண்ணிக்கையும் மாறும். இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. இதற்கும் மாநில அரசுக்கும் தொடர்பே இல்லை.

ந்த சிக்கலுக்குள் போகாமல், ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் அந்தக்கட்சியின் Total Delegates களின் எண்ணிக்கை என்பது, அந்த மாநிலத்தில் கடந்த தேர்தல்களில் அந்தக் கட்சியின் வாக்குப்பதிவு எண்ணிக்கையின் விகிதாச்சர எண்ணிக்கையில் பிரித்துக் கொடுக்ப்படும் ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வகையில், அமெரிக்கா மொத்தத்திற்குமான Delegates களின் எண்ணிக்கையில், Iowa மாநிலத்திற்கு என்று இந்த 2020 ல் ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை.

USA Democratic Party 
Total Pledged Delegates = 3,979 total Unpledged Delegates or Automatic Delegates (aka Super Delegates) =771
Iowa 2020 
Total Delegates 49
  • Total Pledged Delegates:     41
    • District Delegate:         27
    • At- Large Delegate:       9
    • PLEO Delegate Votes:  5
  • Total Unpledged Delegates    8



1 comment:

  1. அருமையான தகவல். அமெரிக்க தேர்தல் முறை தொடர்பில் தமிழில் விளக்கங்கள் கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்வோம்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று (16) ஐந்து வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் 16.02.2020 எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete