Thursday, February 13, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம்-3: Delegates


"மெரிக்காவின் அதிபருக்கான பொதுத்தேர்தலில் (General Election) அதிபரை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். நம்மூரிலும் அது போன்ற முறை வேண்டும்" என்று சொல்வார்கள் இந்தியாவில். நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம். ஏன் என்றால், இந்தியாவின் பிரதம‌ மந்திரி/முக்கிய மந்திரி/Prime Minister என்று பலவாறு அழைக்கப்படும் அவர், அடிப்படையில் ஒரு மந்திரி/அமைச்சர்/ Minister அவ்வளவே. அவருக்கு நடாளுமன்றத்தின் மக்களவையில் மற்ற MP களுடன் சேர்த்து, அதே வரிசையில்தான் உட்கார இடம் கொடுக்கப்படும். வேண்டுமானால், ஓரத்தில் முதல் வரிசையில் கொடுப்பார்கள். அவர் ஒரு அமைச்சரே. ஆனால் முக்கியமான அமைச்சர். அவ்வளவே. இவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது இல்லை.  MP களாக சேர்ந்து ஒருவரைக் காட்டி , இவருதான் எங்க "தல" என்பார்கள் முடிந்தது. மாநில முதலமைச்சரும் அப்படியே.
ப்படி, அமெரிக்காவின் அதிபர் மக்களால் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற மாயை பலரிடம் உண்டு. அது உண்மை அல்ல. அதிபரை மக்கள் தேர்ந்தெடுப்பது இல்லை. மாநிலத்தின் பிரதிநிதிகள் என்ற State Electoral College தான் அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு பிற‌கு வருவோம். இந்த வருடம் 2020 நவம்பரில், நடக்கவுள்ள அதிபருக்கான பொதுத்தேர்தலின் போது  (General Election)  அது குறித்து பேசுவோம். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது, அந்த பொதுத்தேர்தலில், டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடப் போகும்வேட்பாளர் ஒருவரை, அந்தக் கட்சி எப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறது என்ற Presidential Election Primaries & Caucuses தேர்தல் முறை குறித்தே.
ந்த Presidential Election Primaries & Caucuses முறையிலும் மக்கள் நேரடியாக தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டாலும், அவர்கள் தேர்ந்தெடுப்பது வேட்பாளரை அல்ல.   Delegate (a person sent or authorized to represent others) எனப்படும் கட்சி பிரதிநிதிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த Delegate கள் ஒரு இடத்தில் கூடி வேட்பாளரை முடிவு செய்வார்கள்.

ந்த  Delegate கள் பல வகைப்படும். இதைப் புரிந்து கொள்வது ராக்கெட் சயின்சு இல்லை என்றாலும், இம்சையான ஒன்று. அதனாலேயே இது ஆர்வத்தை தூண்டவும் செய்யும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாம் கட்சி வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். அதில்தான்  Delegate வருவார்கள்.  பொதுத்தேர்தலில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் Electoral உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

டெமாக்ரடிக் கட்சியும், ரிபப்ளிகன் கட்சியும் அவர்கள் கட்சிக்கான மொத்த  Delegate கள் இவ்வளவு என்று வைத்துள்ளார்கள். இரண்டு கட்சிகளும் சில இடங்களில் வேறு வேறு முறைகளில் உட்கட்சி தேர்தலை நடத்தும். நாம் இப்போது டெமாக்ரடிக் கட்சியை முன்வத்து, 2020 தேர்தலை பார்ப்பதால்,  அந்தக் கட்சியை மட்டும் பேசுவோம். அதைப்புரிந்துகொண்டாலே நீங்கள் உங்களுக்கு ஒரு சபாசு போடுக்கொள்ளலாம். நானும்தான். எனக்கும் புரிவதற்காகவே எழுதுகிறேன்.
டெமாக்ரடிக் கட்சியின் அமெரிக்கா முழுமைக்குமான மொத்த  Delegate களின் எண்ணிக்கை 4,750. இது இந்த 2020 வருடத்திற்கான கணக்கு. வரும் காலங்களில் மாறலாம். அது உட்கட்சி கணக்கு சார்ந்தது.

இந்த 4,750 Delegates களை இரண்டு வகையாக, அமெரிக்கா முழுமைக்கும் பிரிப்பார்கள்.

Pledged Delegates = 3,979 
Unpledged Delegates or Automatic Delegates (aka Super Delegates) =771

Pledged Delegates
Pledged Delegates களிலேயே பல உட்பிரிவுகள் உண்டு.அவை-District Delegate-At- Large Delegate-Pledged PLEO(Party Leaders and Elected Officials) Delegate
இந்த மூன்று வகையும் மக்களின் நேரடி வாக்குகளின் எண்ணிக்கையைப் பொருத்து, வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் Delegates கள். அவைபற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம். இப்போதைக்கு, Pledged Delegates என்றால், வேட்பாளர் மக்களிடம் வாங்கிய ஓட்டின் அடிப்படையில் வழங்கப்படும் பிரதிநிதிகள் என்று வைத்துக்கொள்வோம்.

Unpledged Delegates
இந்த  Unpledged delegates என்பவர்களை Unpledged PLEO delegates 
PLEO(Party Leaders and Elected Officials) என்று சொல்வதே சரியானது. இவர்களின் எண்ணிக்கை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இந்த மாநிலத்திற்கு இவ்வளவுதான் என்ற கணக்கு நிலையானது இல்லை. இவர்கள் டெமாக்ரடிக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் டெமாக்ரடிக் கட்சி சார்பாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர்கள் , காங்கிரசு உறுப்பினர்கள் என்ற பலகலவையைக் கொண்டது. 2020 ல் இதன் எண்ணிக்கை 771. 

ந்த Unpledged Delegates or Automatic Delegates (aka Super Delegates) =771 பேரின் ஓட்டுகளுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை. 
வர்கள் நேரடியாக, இந்த ஆண்டு  July 13 முதல் - July 16 வரை Milwaukee (Wisconsin state) ல் நடக்கும் 2020 Democratic National Convention கலந்து கொண்டு, அங்கு வாக்களிப்பார்கள். இந்த Unpledged Delegates கள் ட்சியின் நிர்வாகிகள் மற்றும் டெமாக்ரடிக் கட்சி சார்பாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில உறுப்பினர்களாக இருப்பதால், இவர்கள் ஒருவகையில் நம்மூர் வாரிசு அரசியல் போல "எங்க ஏரியா உள்ளே வராத" என்று கூட்டணி அமைத்து, மக்களிடம் நேரடி ஓட்டு வாங்கி வந்த வேட்பாளர்களை கவிழ்த்துவிடலாம். 

2016 தேர்தலில் ஃபெர்னி சான்டர்சை இப்படித்தான் ஃகிளாரி கிளிண்டன் ஆதரவு கூட்டம் காலை வாரிவிட்டது. 2016 ல் இந்த Unpledged Delegates கள் மட்டும் ஃபெர்னி சான்டர்சை ஆதரித்திருந்தால், இன்று ட்ரம்ப்பின் ஆட்சி வந்திருக்காது. 

ம் "2016 ல் ஃபெர்னி சான்டர்ச் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராகி இருந்திருந்தால், ட்ரம்ப்பை தோற்கடித்து இருப்பார். உப்புச் சப்பற்ற , களத்தில் ஆதரவற்ற ஃகிளாரி கிளிண்டன் , ட்ரம்பை வெல்ல முடியாமல் தோற்றுப்போனார்", என்பது, எனது கணிப்பும் பெரும்பாலான டெமாக்ரடிக் கட்சி & ஃபெர்னி ஆதரவாளர்களின் கணிப்பு அல்லது ஆதங்கம்.

2016 ல் நடந்த இந்த சதி வேலைகளால், ஃபெர்னி சான்டர்ச் தரப்பு போராடி, Unpledged Delegates கள் , கடைசி நேரத்தில் இப்படி ஆட்டையைக் கலைக்கும் அவலநிலையை மாற்றினார்கள். இந்த ஆண்டுமுதல், இந்த Unpledged Delegates கள், Democratic National Convention ல் முதல் சுற்றில் ஓட்டுப் போட மாட்டார்கள்.

மெரிக்கா முழுமைக்கும் உட்கட்சி தேர்தல்கள் நடந்து, மக்களின் நேரடி வாக்குகள் மூலம் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் Pledged Delegate களின் அடிப்படையில் ஒரு வேட்பாளர் 1,990 பெற்றுவிட்டால் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். 

தாவது மொத்த Pledged Delegates = 3,979  ளில், மூன்றில் இரண்டு பங்கு (1,990) ஒருவர் பெற்றிருந்தால், அவரையே கட்சியின் வேட்பாளராக‌ Democratic National Convention ல் அறிவித்துவிடுவார்கள். அவர்தான் 2020 General Election ல் அதிபர் ட்ரம்பை (ரிபப்ளிகன் கட்சி)  எதிர்த்து டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடுவார்.

ருவேளை யாருமே 1,990 என்ற அந்த எண்ணிக்கையை அடையாத போது, இந்த Unpledged Delegates or Automatic Delegates (aka Super Delegates) =771 அவர்களின் வேலையைக் காட்டுவார்கள். இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம். இவர்களும் ஓட்டுப்போடும் போது, Democratic National Convention ல் ஒரு குட்டித் தேர்தலே நடக்கும். அதை Second Ballot(இரண்டாவது வாக்கு) தேர்தல் என்பார்கள்.

ந்த ஆண்டு ஃபெர்னி மக்களின் நேரடி ஓட்டுகள் மூலம் கிடைக்கும் Pledged Delegates ல் , 1,990  என்ணிக்கையைப் பெறாவிடில், இந்த Unpledged Delegates கள் அவரை சென்ற‌ 2016 தேர்தலில் நடந்தது போல வரவிடாமல் செய்துவிடுவார்கள்.


மெரிக்கா முழுமைக்குமான Pledged Delegates = 3,979  ஐ எப்படி மாநிலங்களுக்குள் பிரித்து ஒதுக்குகிறார்கள் என்பதையும், அந்த அந்த மாநிலத்தில் இந்த Delegates  கள் எப்படி தேர்ந்தடுக்கப்படுகிறார்கள் என்பதையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

No comments:

Post a Comment